முகப்பு
தற்போதைய செய்திகள்

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் 7வது ஸ்ரீ பாகவத நவாஹ சத்ரம்

22 மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்  - குருவாயூரப்பன் கோயிலி்ல் 27-ஆம் தேதி 7-ஆவது ஸ்ரீ பாகவத நவாஹ சத்ரம் நிகழ்ச்சி தொடங்கியது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:03 PM
பகிர்:

சென்னை. 22 மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்  - குருவாயூரப்பன் கோயிலி்ல் 27-ஆம் தேதி 7-ஆவது ஸ்ரீ பாகவத நவாஹ சத்ரம் நிகழ்ச்சி தொடங்கியது.

கோயின் சோபானம் அரங்கில் காலை 8.50 மணிக்கு இசையமைப்பாளர் இளையராஜா, தமிழக அரசின் நிலநிர்வாக ஆணையாளரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான வி.கே.ஜெயக்கொடி தொடங்கி வைக்கிறார். தொடக்க நிகழ்வுக்குப் பிறகு, ஸ்ரீ மத் பாகவத நவாஹ சத்ரத்தின் முக்கிய யக்ஞ ஆச்சாரியரான தோட்டம் ஷ்யாம் நம்பூதிரி 9-நாட்களும் நிகழ்ச்சிகளை வழிநடத்துகிறார். தொடர்ந்து பிப்ரவரி 4ஆம் தேதி பிற்பகல் வரை நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

காலை 6 மணி முதல் இரவு 7.15 மணி வரை ஆன்மிக உரை நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன. அவற்றில், பிரம்மஸ்ரீ வயப்ரம் வாசுதேவ பிரசாத், பிரம்மஸ்ரீ கல்லம்வள்ளி ஜெயன் நம்பூரிதி, பிரம்மஸ்ரீ பாலஞ்சேரி நவீன் சங்கர், ஈரோடு எஸ்.பாலாஜி, பிரம்மஸ்ரீ தெக்கேடம் நாகராஜன் நம்பூதிரி, மாடசேரி நீலகண்டன் நம்பூதிரி, பெருங்கர கேசவன் நம்பூதிரி, ரவிவர்ம சர்மா, கூனம்பள்ளி ஸ்ரீராம் நம்பூதிரி, காலடி சங்கர நாராயணன் நம்பூதிரி, வெல்லநேழி ஹரிகிருஷ்ணன், ஸ்ரீ காந்த் ஷர்மா, காவநாடு ராமன் நம்பூதிரி, ராஜாராம் ஷர்மா, சாந்தா பாலன், பிரம்மஸ்ரீ மும்பை சந்திரசேகர ஷர்மா, ஆச்சார்யா கிருஷ்ணப் ப்ரியா, தாமரசேரி ஈஸ்வரன் பட்டத்ரி, சுவாமி மோக்ஷ வித்யானந்த சரஸ்வதி, பிரம்மஸ்ரீ கண்டமங்கலம் பரமேஸ்வரன் நம்பூதிரி, டாக்டர் சுதா சேஷய்யன் உள்ளிட்டோர் பங்கேற்று ஆன்மிக சொற்பொழிவாற்றுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.