தற்போதைய செய்திகள்

கமலா மில்ஸ் உரிமையாளரை ஜனவரி 29 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு

DIN

மும்பையில் லோயர் பரேல் பகுதியில் உள்ள கமலா மில்ஸ் வளாகத்தில் 'டிரேட் ஹவுஸ்' என்ற வணிக வளாகக் கட்டடத்தின் மேல்தளத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவு குஷ்பு பன்சாலி என்பவர் தனது பிறந்த நாளை, தனது நண்பர்களுடன் அந்தக் கட்டடத்தின் மொட்டை மாடியில் கட்டப்பட்டிருந்த 'அபோவ் ஒன்' என்ற உணவு விடுதியில் கொண்டாடினார். 

நள்ளிரவு நடைபெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில், பிறந்தநாள் கொண்டாடிய குஷ்பு பன்சாலியும், 10 பெண்களும், 3 ஆண்களும் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குஷ்பு பன்சாலியின் நண்பர்கள் ஆவர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தீவிபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விடுதியின் உரிமையாளர்களின் உறவினர்கள், மேலாளர்கள் உள்ளிட்ட சிலரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கமலா மில்ஸ் வணிக வளாகத்தில் நிகழ்ந்த தீவிபத்து குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. மாநகர ஆணையரிடம் வழங்கப்பட்ட அறிக்கையில், தீவிபத்து பாதுகாப்பு விதிகள் எதையும் விடுதி நிர்வாகங்கள் பின்பற்றவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக ‘ஒன் அபோவ்’ ஹோட்டல் உரிமையாளர்கள் ஜிகார் சங்வி, கிரிபேஷ் சிங்வி மற்றும் அப்ஜீத் மன்கர் மற்றும்  மேலாளர் இரண்டு பேரை மும்பை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இதையடுத்து மில் உரிமையாளர் ரமேஷ் கோவானி ஜனவரி 29 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT