தற்போதைய செய்திகள்

பாஜக வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் 5 ஆண்டுகள் தேவை: சொல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி

இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை, அதுகுறித்து பேச நான் நிதி அமைச்சர் கிடையாது என

PTI

மும்பை: பாஜக அரசு அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என பாஜக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார். 
 
மும்பையில் விராத் இந்துஸ்தான் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சுப்பிரமணியன் சுவாமி கலந்துக்கொண்டு பேசுகையில், “பொருளாதார வளர்ச்சிகள் வாக்குகளை கொண்டுவரப்போவாது கிடையாது. கடந்த முறை முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்தியா ஒளிருகிறது என்ற கோஷத்துடன் தன்னுடைய அரசுக்கு பிரசாரம் மேற்கொண்டார்.

ஆனால், அது மக்கள் மத்தியில் எடுபாடமல் தோல்வியில் முடிந்தது. மீண்டும் பாஜக தன்னுடைய நம்பிக்கை (இந்துத்துவா) மற்றும் ஊழலற்ற அரசு அமைப்போம் என வாக்குறுதியளித்தது. இதனால் 2014-இல் அதிகமான தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. இந்துத்துவா மட்டுமே பாஜகாவிற்கு உதகிறது.

மேலும், 2014 தேர்தலின் போது ஆளும் பாஜக அரசு கொடுத்த எல்லா வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என்று நான் கூறமாட்டேன், ஆனால், நாங்கள் தொடங்கி வைத்த நல்ல திட்டங்கள் மற்றும் அதனுடைய பணியை நிறைவேற்ற மேலும் 5 ஆண்டுகள் தேவைப்படுவதால், மக்கள் அந்த வாய்ப்பினை அளிக்க வேண்டும். 

இப்போது இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை, அதுகுறித்து பேச நான் நிதி அமைச்சர் கிடையாது என சுப்பிரமணியன் சுவாமி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநாட்டுத் திடலில் குவிய ஆரம்பித்த தவெக தொண்டர்கள்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Vijay | Madurai

"நீ அரியணை ஏறும் நாள் வரும்": ஷோபா சந்திரசேகர் வாழ்த்து!

இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும்: ரஷியா அறிவிப்பு

தொடர்ந்து 4-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!!

தங்கம் விலை அதிரடியாக உயர்வு! எவ்வளவு?

SCROLL FOR NEXT