முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்தியப் பொருளாதாரம் தவறான திசையில் செல்கிறது: பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென்

இந்தியப் பொருளாதாரம் தவறான திசையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநரும்

Updated On : 9 ஜூலை, 2018 at 4:03 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM


புதுதில்லி: இந்தியப் பொருளாதாரம் தவறான திசையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநரும் எழுத்தாளருமான அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.

தில்லியில் நூல் வெளியீட்டு விழாவில் அமர்த்தியா சென் பேசுகையில், இந்தியாவில் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியடைந்ததாக இருந்த போதிலும், 2014-ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து அது தவறான திசையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

இருபதாண்டுகளுக்கு முன் தெற்காசிய மண்டலத்தில் பொருளாதரத்தில் பாகிஸ்தான், வங்காளம், நேபாளம் மற்றும் பூட்டான், இலங்கைக்கு அடுத்து இரண்டாவது சிறந்த நாடாக விளங்கிய இந்தியா, இப்போது மோசமான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்து இரண்டாவதாக உள்ளதாக அமர்த்தியா சென் தெரிவித்தார்.

Advertisement

சமூகத்தின் ஒரு பிரிவினர் அடுத்த வேளை உணவுக்கான உறுதி இல்லாமலும், நலவாழ்வு, கல்வி ஆகியவை இல்லாமலும் வாழ்ந்து வருவதாக அமர்த்தியா சென் தெரிவித்தார். தலித்துகளுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்முறை சுட்டிக்காட்டியவர், இதற்கு உதரணமாக சமீபத்தில் மத்தியப்பிரதேசத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை தூணில் கட்டி வைத்து உரிமையாளரே தாக்கிய சம்பவத்தை குறிப்பிட்டவர், சாதி அமைப்பு மற்றும் சமூகத்தின் ஒரு பிரிவினரிடையே இருந்து சமத்துவமின்மையை கண்டுகொள்ளாமல் அரசு ஒதுங்கியிருப்பதாக பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.