தற்போதைய செய்திகள்

ஜார்கண்ட்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை

ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை

ANI


ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்கண்ட் ஹசாரிபாக்கில் வசித்து வந்த நரேஷ் என்பவர் தாய், தந்தை, மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று நரேஷ் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரில் இருவர் தூக்கில் தொங்கியும், மற்ற இருவர் தொண்டை அறுக்கப்பட்டும், பெண் குழந்தை விஷம் கொடுக்கப்பட்டும். ஒருவர் வீட்டின் மாடியில் இருந்து குதித்தும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை சம்பவம் நடந்த பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், குடும்பத்தில் ஏற்பட்ட பெருகிவரும் கடன் சுமைகள் காரணமாக அனைவரும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதனால் தற்கொலை செய்ய திட்டமிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்கை விசாரிக்கும் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த தற்கொலை சம்பவம் குறித்து தகுந்த விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் தடவியல் நிபுணர்களின் உதவியை நாடி உள்ளோம். தற்கொலை செய்து கொண்டவர்களில் ஆறாவது நபரான சிறுவனை மாடியிலிருந்து தள்ளிவிட்டது தெரிய வந்துள்ளது’ என கூறினார்.

இந்த தற்கொலை சம்பவம் இந்த மாதத்தில் நிகழ்ந்த இரண்டாவது பெரிய சம்பவமாகும். முன்னதாக மாத தொடக்கத்தில் தில்லி புராரியை அடுத்த சந்த் நகர் இரண்டாவது தெருவில் உள்ள குடியிருப்பின் முதலாவது மாடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் வசித்து வந்தனர். அவர்களில் 4 ஆண்கள், 6 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கடந்த ஜூலை 1-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தனர். வயதான மூதாட்டி ஒருவர் அருகில் உள்ள அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT