கேரளாவில் காரும் ஆந்திர பேருந்தும் மோதி விபத்து: 6 பேர் பலி
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே காரும் ஆந்திரா மாநில பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் இருந்த 6 பேர்
கோட்டயம்: கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே காரும் ஆந்திரா மாநில பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் இருந்த 6 பேர் பலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆந்தாரவில் இருந்து சபரிமலைக்கு பக்தர்களை ஏற்றிக்கொண்டு வந்த பேருந்து, கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே அதிகாலை 3 மணியளவில் எதிரே வந்துகொண்டிருந்த காரின் மீது விபத்துக்குள்ளானது.
இதில், காரில் இருந்த ஜெனிஷ், விஜயன், கிரண், உன்னி, ஜெரின், ஜெனிஷ் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
Advertisement
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.