முகப்பு
தற்போதைய செய்திகள்

பிரதமர் நாற்காலியை பிடிப்பதற்காக ராகுல் ஓடுகிறார்: மோடி கடும் தாக்கு

பிரதமர் நாற்காலியை பிடிப்பதற்காக ராகுல்காந்தி எப்படி ஓடுகிறார் என்பதை நீங்களே பார்த்து இருப்பீர்கள். பிரதமர் நாற்காலியை தவிர வேற

தற்போதைய செய்திகள்

பிரதமர் நாற்காலியை பிடிப்பதற்காக ராகுல் ஓடுகிறார்: மோடி கடும் தாக்கு

பிரதமர் நாற்காலியை பிடிப்பதற்காக ராகுல்காந்தி எப்படி ஓடுகிறார் என்பதை நீங்களே பார்த்து இருப்பீர்கள். பிரதமர் நாற்காலியை தவிர வேற

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:17 PM
பகிர்:


புதுதில்லி: பிரதமர் நாற்காலியை பிடிப்பதற்காக ராகுல் காந்தி எப்படி ஓடுகிறார் என்பதை நீங்களே பார்த்து இருப்பீர்கள். பிரதமர் நாற்காலியை தவிர வேற எதையும் அவர் பார்க்கவில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் நடைபெற்ற விவசாயிகள் வளர்ச்சி கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுகையில், கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கென பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் மானியத் தொகைகள் நேரடியாக வழங்கப்படுகின்றன. விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவசாயிகளின் வாழ்க்கை மேம்பட என்ன செய்ய வேண்டுமோ அதை பாஜக அரசு செய்யும். 2019-இல் நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம் வழங்குவதாக நாங்கள் சபதம் செய்துள்ளோம். காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. இப்போது விவசாயிகளின் பேரில் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர். இந்த அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது.

மக்களவையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர்கள் காரணம் ஏதும் கூறாமல் கட்டித்தழுவிட்டு சென்றார் என ராகுலை மோடி மறைமுகமாக குற்றம்சாட்டினார். பிரதமர் நாற்காலியை பிடிப்பதற்காக ராகுல் காந்தி ஓடுகிறார். பிரதமர் நாற்காலியை தவிர வேற எதையும் அவர் பார்க்கவில்லை. சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கும் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர், ஆனால், நாட்டு மக்கள் அதை அழித்தனர் என்று மோடி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →