தற்போதைய செய்திகள்

மத்தியபிரதேசத்தில் 60 லட்சம் போலி வாக்காளர்கள்: ஆதாரத்தை வெளியிட்டது காங்கிரஸ் 

மத்திய பிரதேசத்தில் 60 லட்சம் போலி வாக்காளர் சேர்க்கப்பட்டிருப்பதற்கான ஆதாரத்தை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 

DIN

புதுதில்லி: மத்திய பிரதேசத்தில் 60 லட்சம் போலி வாக்காளர் சேர்க்கப்பட்டிருப்பதற்கான ஆதாரத்தை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரவிருக்கும் தேர்தலில் குளறுபடி செய்ய ஆளும் அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் வாக்காளர் பட்டியலில் 60 லட்சம் பேர் வரை போலி வாக்காளராக சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான ஆதாரத்தை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளோம். வாக்காளர் பட்டியலில் வேண்டுமென்றே பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நிர்வாகத்தின் கவனக்குறைவு அல்ல, நிர்வாகத்தின் தவறான செயல்பாடு எனக் கூறிய கமல்நாத், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இங்குள்ள பாஜக அரசை வீழ்த்த அனைத்து எதிர்கட்சியினரும் ஒன்று சேர முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார். 

10 ஆண்டுகளில் மக்கள் தொகை 24 சதவிகிதம் அதிகரித்துள்ளது, ஆனால், எல்லா தொகுதிகளிலும் வாக்காளர்கள் எண்ணிக்கை 40 சதவீதம் என நாங்கள் பட்டியலிட்டுள்ளோம் என்றும் ஒரு வாக்காளரின் பெயர் 26 இடங்களில் வாக்காளர் பட்டியல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

ஏப்ரல் மாதத்தில், மத்திய தேர்தல் வாக்காளர் பட்டியலில் இருந்து ஆறு லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரி சலினா சிங் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT