முகப்பு
தற்போதைய செய்திகள்

​ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: 2 போலீஸார் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2

Updated On : 12 ஜூன், 2018 at 9:18 AM
பகிர்:


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 போலீஸார் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்ட நீதிமன்றம் வளாகத்தில் இரவு பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். 

இந்நிலையில், இன்று செவ்வாய்கிழமை அதிகாலை அந்த பகுதியில் நுழைந்த பயங்கரவாதிகள் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரை குறிவைத்து துப்பாக்கியால் சுட தொடங்கினர்.

Advertisement

இதற்கு பதிலடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 2 போலீஸார் உயிரிழந்தனர். மேலும், மூன்று போலீஸார் காயமடைந்துள்ளனர். இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையின் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.