காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் அருகே ஸ்ரீகுப்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சூட்டில்
ஆனந்த்நாக்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் அருகே ஸ்ரீகுப்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஆனந்த்நாக் மாவட்டத்தின் ஸ்ரீகுபாரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக இன்று காலை வந்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர். இதையடுத்து பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இரு பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளதாகவும், மேலும் ஒரு பயங்கரவாதியை தேடிவருவதாகவும் தகவல் வெளி்யாகி உள்ளது. இதையடுத்து ஸ்ரீகுப்வாரா பகுதியில் கூடுதலாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.