தற்போதைய செய்திகள்

தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் காலமானார்

தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில்(92) உடல் நல குறைவால் இன்று காலமானார். 

DIN


சியோல்: தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில்(92) உடல் நல குறைவால் இன்று காலமானார். 

தென் கொரியாவின் முன்னாள் பிரதமராக இருந்தவர் கிம் ஜாங் பில். இவர் அந்நாட்டின் உளவு பிரிவை உருவாக்கியவர்.  கடந்த 1971-ஆம் ஆண்டு முதல் 1975-ஆம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். அதன்பின்னர் அதிகார பகிர்வு திட்டத்தின் கீழ் கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்துள்ளார்.

நாட்டில் இரு முறை பிரதமராக பதவி வகித்த கிம் ஜாங் பில் உடல் நல குறைவால் சியோல் நகரில் உள்ள சூன்சன்ஹியாங் பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

வட கொரியாவுடன் ஜனநாயக முன்னேற்றம் மற்றும் சமதான முயற்சிகளுக்காக 2000-இல் அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. 

கிம் ஜாங் தேசிய சட்டப்பேரவையில் ஒன்பது முறை பணியாற்றி உள்ளார். நாடாளுமன்றத் தேர்தல்களில் தோல்வியை சந்தித்த பின்னர் 2004-இல் அரசியலை விட்டு வெளியேறினார்.

கிம் ஜாங் பில் இறுதி ஏற்பாடுகள் குறித்து அறிவிப்புகள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT