தற்போதைய செய்திகள்

மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு: ராகுல் கடும் தாக்குதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு

IANS

புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கி பேசியுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் பேசும் போது, பிரதமர் மோடி தினமும்  தன் வீட்டில் நடப்பது குதிப்பதை எல்லாம் வீடியோ எடுத்து யோகா என்ற பெயரில் இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அதே நேரத்தில் இந்தியாவில், ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளை விட அதிகமாக பாலியல் வன்முறைகள் நடந்து விடுகிறது. இது மிகவும் வெட்ககேடானது. 

ராய்டர்ஸ் பவுண்டேஷன் 550 நிபுணர்களிடம் நடத்திய ஒரு ஆய்வின் அடிப்படையில் பெண்களுக்கு உலகில் மிக ஆபத்தான நாடு இந்தியா என தெரியவந்துள்ளது. பாலியல் வன்முறை மற்றும் உள்நாட்டுப் பணி, கட்டாய உழைப்பு, பாலியல் அடிமைத்தனம் மற்றும் பாலியல் வன்முறைக்கென மனித கடத்தல் ஆகியவற்றின் காரணமாக, உலகின் மிக ஆபத்தான நாடாக இந்தியா உள்ளது என தெரியவந்துள்ளது. 

மேலும் இந்த அறிக்கையில் பெண் பிறப்புறுப்புச் சிதைவு, குழந்தை திருமணம் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் ஆகியவற்றை மேற்கோள் காட்டியுள்ளதோடு உலகிலேயே இந்தியா மிகவும் ஆபத்தான நாடு என குறிப்பிடப்பட்டுள்ளதாக ராகுல் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT