தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிராவில் விஷம் கலந்த தண்ணீரை குடித்த 14 பேர் பலி!

DIN

யவத்மால்: மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் கிராமத்தில் 250 அடி ஆழ்துளை போர்வெல் பைபிலிருந்த வந்த நச்சுத்தன்மை வாய்ந்த தண்ணீரை குடித்த 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த கிராமத்து மக்கள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலிருந்து 420 கிமீ தொலைவில் உள்ள யவத்மால் கிராமத்தின் குடிநீருக்கு ஆதாரமாக உள்ள 250 அடி ஆழ்துளை போர்வெல் பைபில் நச்சுத்தன்மை கலக்கப்பட்டுள்ளது. இதனை அறியாத கிராம மக்கள், அதில் இருந்து வருந்த நச்சுத்தன்மை வாய்ந்த தண்ணீரை குடித்ததனால் கடந்த 24 மாதங்களில், 14 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். மேலும், குறைந்தபட்சம் 38 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 110க்கும் அதிகமானோர் சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 
சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுகுறித்து அரசாங்கத்திற்கு தகவல் அளித்ததுடன் தங்களுக்கு முறையான மருத்துவ வசதி செய்து தரும்படி கோரிக்கை வைத்தோம். ஆனால், அரசு இதுவரை இந்த விவகாரத்தில் முறையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

ஆச்சார்யா வினோபா பாவே மருத்துவமனையின் மருத்துவர் அபியூடி மெகே கூறுகையில், யவத்மால் கிராம மக்கள் 38 பேர் சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளால் பாதிகப்பட்டு எங்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அருந்திய குடிநீரில் அதிகயளவில் நைட்ரேட் கலந்துள்ளதால் இதுபோன்ற பிரச்னைகளால் பாதிகப்பட்டுள்ளனர் என .உறுதிப்படுத்தினார். 

கிராம மக்கள் குடிநீரில் நச்சுத்தன்மை கலந்துவருவது குறித்து புகார் அளித்தபோதிலும், இந்த விவகாரத்தில் அரசு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் விரைந்து நடவடிக்கை மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க அரசு முன்வர வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT