தற்போதைய செய்திகள்

சத்தீஸ்கரில் முதல்வர் தலைமையில் 1100 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம்!

DIN

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் முதல்வர் ரமன் சிங் முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 1100 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடைபெற்றது. 

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் ரமன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில அரசின் சார்பில் ‘முதல்வர் கன்னியா விவாக திட்டம்’ மூலம் ஏராளமான இளம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை பஸ்டர் மாவட்டம், ஜகதல்பூர் பகுதியில் முதல்வர் ரமன் சிங் முன்னிலையில் 1100 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடைபெற்றது. 

இதில், 11 ஜோடிகளுக்கு கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. அரசு சார்பில், மணமகன்கள் மற்றும் மனமகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒவ்வொரு தம்பதியினருக்கும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள வீட்டுப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT