தற்போதைய செய்திகள்

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: பலத்தை அதிகரிக்க பாஜக மும்முரம்

DIN

காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் நான்கு இடங்களுக்கு பதிலாக காங்கிரஸ் 3, பாஜக, மஜத தலா ஒரு வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. இதனால்  போட்டி உருவாகியுள்ளது. 

நாளை, காலை 9 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடையும். ரிசல்ட் மாலையிலேயே அறிவிக்கப்படும். எம்.பி பதவியிடங்கள் காலியாக உள்ள 16 மாநிலங்களில் 11ல் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே, ராஜ்யசபாவில் அக்கட்சிக்கு கூடுதல் இடம் கிடைக்கும் என தெரிகிறது. 

காங்கிரஸ் தனது 3-ஆவது வேட்பாளரை வெற்றிபெற செய்ய கூடுதலாக 10 இடங்கள் தேவைப்படுகிறது. மஜத அதிருப்தி அடைந்துள்ள 7 எம்எல்ஏக்கள் வெகுவிரைவில் காங்கிரஸ் கட்சியில் சேரவிருக்கிறார்கள். எனவே, 7 எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை பெற்று மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் 3-ஆவது வேட்பாளரின் வெற்றியை உறுதிசெய்துகொள்ள அக்கட்சி வியூகம் வகுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் வியூகத்தை முறியடித்து, மஜதவின் வேட்பாளர் பி.எம்.ஃபாரூக்கை வெற்றிபெற செய்ய மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகெளடா சட்டரீதியான நடவடிக்கையில் இறங்க திட்டமிட்டுள்ளார்.

இப்போது 245 பேர் கொண்ட மாநிலங்களவையில் பாஜகவுக்கு 58 எம்.பி.க்கள் உள்ளனர். காங்கிரசை விட நான்கு எம்.பி.க்கள் மட்டுமே பாஜகவுக்கு அதிகமாக உள்ளனர். தனி மெஜாரிட்டிக்கு 126 எம்.பி.க்கள் தேவை. உத்தரபிரதேசத்தில் இருந்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி போட்டியிடுகிறார். ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், மாநிலங்களவைத் தேர்தல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

மாநில வாரியாக தேர்ந்தெடுக்கப்படும் எம்பிக்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு:

ஆந்திரம் - 3, பீகார் - 6, சத்திஷ்கர் - 1, குஜராத் - 4, அரியானா - 1, இமாசலப்பிரதேசம் - 1, கர்நாடகம் - 4, மத்தியப்பிரதேசம் - 5, மகாராஷ்டிரம் - 6, தெலங்கானா - 3, உத்தரபிரதேசம் - 10, உத்தரகாண்ட்- 1, மேற்குவங்கம்- 5, ஒடிசா - 3, ராஜஸ்தான் - 3, ஜார்கண்ட் - 2, கேரளம் - 1.

மொத்தம் தேர்தல் நடைபெற உள்ள 59 இடங்களில் 33 இடங்களுக்கு போட்டியின்றி உறுப்பினர் தேர்வு நடந்துள்ளது. ஆக, மீதமுள்ள 26 இடங்களுக்கு மட்டும்தான் தேர்தல் நடைபெற வேண்டும்.

போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்ட 33 பேரில் பாஜகவினர் – 19 பேர், காங்கிரஸ் - 5, பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் 5 பேர். மீதமுள்ள 26 இடங்களுக்கான தேர்தல் 6 மாநிலங்களில் நடைபெறுகிறது.

உத்தரபிரதேசத்தில் 10 இடங்களுக்கும் மேற்கு வங்கத்தில் 5 இடங்களுக்கும், கர்நாடகத்தில் 4 இடங்களுக்கும் தெலங்கனாவில் 3 இடங்களுக்கும், ஜார்கண்டில் 2 இடங்களுக்கும், சத்திஷ்கரில் 1 இடத்துக்கும் கேரளத்தில் ஒரு இடத்திற்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

SCROLL FOR NEXT