பாகிஸ்தான் திரும்பினார் மலாலா
தாலிபான்களால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் பிழைத்து வெளிநாட்டில் வசித்து வரும் மலாலா 6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பினார்.
தாலிபான்களால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் பிழைத்து வெளிநாட்டில் வசித்து வரும் மலாலா 6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பினார்.
பாகிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்வியை எதிர்க்கும் தலிபான்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பெண்கள் பள்ளிக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதனை எதிர்த்து பெண் கல்விக்கு போராடிய மலாலா யூசபாய் என்ற மாணவியை வீடு புகுந்து தலிபான் பயங்கரவாதி சுட்டதில் படுகாயம் அடைந்த சிறுமி லண்டனில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறியுள்ளார்.
மலாலாவின் தைரியத்தை பாராட்டும் வகையில், அவரது பிறந்த நாளான, ஜூலை 12ம் தேதியை மலாலா தினம் என்று ஐ.நா. சபை அறிவித்தது. அன்றைய தினம் மலாலாவின் 16வது பிறந்த நாள் விழா ஐ.நா. சபையில் கொண்டாடப்பட்டது. இதில் மலாலா கலந்து கொண்டு தலிபான்கள் உள்பட யாரும் எனக்கு எதிரிகள் கிடையாது. எல்லா குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று பேசினார்.
Advertisement
இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு மலாலா மீண்டும் பாகிஸ்தான் திரும்பினார். மலாலாவின் வருகையை அறிந்த பாக்ஸ்தான் மக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.