விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
விராலிமலை அம்மன்குளம் பட்டமரத்தான் கருப்பசாமி கோயில் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறவுள்ளது. இதில் முதல் பரிசாக மாருதி கார், ராயல் என்பீல்டு புல்லட், பைக்குகள், சைக்கிள் என பல லட்சம் மதிப்பில் பரிசு வழங்க
விராலிமலை அம்மன்குளம் பட்டமரத்தான் கருப்பசாமி கோயில் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறவுள்ளது. இதில் முதல் பரிசாக மாருதி கார், ராயல் என்பீல்டு புல்லட், பைக்குகள், சைக்கிள் என பல லட்சம் மதிப்பில் பரிசு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விராலிமலை அம்மன்குளம் பட்டமரத்தான் கருப்பசாமி கோயிலில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான போட்டி வருகிற மார்ச் 29ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி, ஜல்லிக்கட்டு திடல் தயார்படுத்துதல், காளை, மாடுபிடி வீரர்கள் பதிவு, பாதுகாப்பு வேலி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
காலை 7 மணிக்கு தொடங்கும் ஜல்லிக்கட்டு போட்டியை ஆட்சியர் சு. கணேஷ் தலைமையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தொடங்கிவைக்கிறார்.
Advertisement
இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், நத்தம், கருர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 2ஆயிரம் காளைகளும், திரளான மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.