தற்போதைய செய்திகள்

காஷ்மீரில் பள்ளி பேருந்து மீது கல்வீச்சு: பள்ளிக் குழந்தைகள் 2 பேர் காயம்; மெகபூபா முஃப்தி கண்டனம்

PTI

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பள்ளி பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கத்துவா சிறுமி பலாத்கார சம்பவத்தை அடுத்து வன்முறை ஏற்பட்டதால் இயல்பு நிலை திரும்பும் வரை கடந்த மாதம் பள்ளி, கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில்  சோபியான் மாவட்டத்தில் உள்ள கனிபோரா என்ற இடத்தில் 4 வயது குழந்தைகள் உள்பட 50 மாணவர்கள் சென்ற ரெயின்போ இன்டர்நேஷனல் பள்ளிப் பேருந்தின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதில், இரு குழந்தைகளுக்கு தலையில் காயமம் ஏற்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த இரண்டாம் வகுப்பு மாணவன் ரேகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இச்சம்பவத்திற்கு முதல்வர் மெஹ்பூபா முஃப்தியும், முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சோபியானில் பள்ளி பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது. உணர்ச்சியற்ற, முட்டாள்தனமான மற்றும் கோழைத்தனமான தாக்குதலை நடத்தியவர்கள் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று மெகபூபா முஃப்தி கூறியுள்ளார். 

உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பள்ளி மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பஸ் மீது கற்களை வீசுவது கல்வீச்சாளர்களின் நோக்கத்திற்கு பயனளிக்கும்? இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன் என பதிவிட்டுள்ளாரர். 

ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் எஸ்.பி வாயித், “இளம் பள்ளி குழந்தைகள் செல்லும் பள்ளி பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதல் முற்றிலும் முட்டாள்தனமானது. குற்றவாளியை நீதியின் முன் நிறுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT