தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாலம் இடிந்து 5 மாணவர்கள் பலி: 20 பேர் மாயம்

பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் பாலம் இடிந்து விழுந்ததில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். 20 பேர் காணவில்லை என தகவல்

DIN

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் பாலம் இடிந்து விழுந்ததில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். 20 பேர் காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 

பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் ஜீலம் ஆற்றின் குறுக்கே போடப்பட்டு இருந்த மரப்பாலம் மீது லாகூர் மற்றும் பைசாலாபாத்தை சேர்ந்த 20 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் மொத்தமாக நின்று புகைப்படம் எடுத்து உள்ளனர். அப்போது பாரம் தாங்காமல் பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதில், 5 மாணவர்களின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானவர்களை தேடும் பணியில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இருப்பினும், மிகுந்த குளிர் நிலவி வருவதால் மாயமானவர்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மரப்பாலம் நான்கு நபர்களை மட்டுமே நான்கு தாங்கும் சக்தி கொண்டது என்றும், அதற்கான காரணத்திற்கான  தொடர்புடைய எச்சரிக்கை அறிகுறிகளும் அங்கு குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாக்கிஸ்தான் பிரதமர் மாயமானவர்களை மீட்கும் பணிகளில் விரைந்து செயல்படுமாறு துணை ஆணையாளரைக் கேட்டுக்கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT