முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் புழுதி புயல் : பலியானவர்கள் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

உத்தரப் பிரதேசம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் பலியானவர்கள்

Updated On : 14 மே, 2018 at 10:07 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:32 PM

உத்தரப் பிரதேசம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் பலியானவர்கள் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை திடீரென புழுதிப் புயல் தாக்கியது. மணிக்கு 109 கிமீ வேகத்தில் காற்று வீசியதுடன் மழையும் பெய்தது. இதில் மரங்கள் விழுந்ததில் ஒரு பெண் உள்பட இருவர் பலியாகினர். மேலும், 18 பேர் காயமடைந்தனர்.

முன்னதாக உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் அண்மையில் புழுதிப் புயல் தாக்கியதிலும், இடி-மின்னலுடன் பெய்த மழையிலும் சுமார் 134 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் உத்தரப் பிரதேசம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் பலியானவர்கள் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டரில், நாடு முழுவதும் மழை மற்றும் புழுதி புயலுக்கு பலர் பலியானது வருத்தம் அளிக்கிறது. இதில் பலியானவர்கள் குடும்பத்துக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மோடி ட்விட்டரில்,நாட்டின் சில மாநிலங்களில் புழுதி புயல் தாக்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனிடம் வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.