தற்போதைய செய்திகள்

எடியூரப்பா ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்

DIN

புதுதில்லி: பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். 

நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து இன்று மாநிலத்தின், 23-வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பக்க பதிவில், பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல். பாஜக, வெற்றியை கொண்டாடும் வேளையில், ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டதற்கு இந்தியா வருத்தம் கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

SCROLL FOR NEXT