தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்பு

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்று தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்றார்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி, பொதுமக்களைக் கொடிய நோய் உபாதைகளிலிருந்து காப்பாற்ற வேண்டும்  எனக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு போராட்டம் மோதல் கலவரமாக மாறிய சூழலில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தூத்துக்குடியே போர்க்களமானது.
துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்று தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்றார் 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக ஷில்பா பிரபாகர் சதீஷை நியமனம் செய்து தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT