தற்போதைய செய்திகள்

நிபா வைரஸ்: கேரளத்தில் மேலும் ஒருவர் பலி 

நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கேரளத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று உயிரிழந்ததை அடுத்து பலியானோரின் எண்ணிக்கை 13-ஆ

DIN

நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கேரளத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று உயிரிழந்ததை அடுத்து பலியானோரின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு கேரளத்தில் கண்டறியப்பட்ட நிபா வைரஸானது, அந்த மாநிலத்தை மட்டுமன்றி நாடு முழுவதும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. அண்மையில் கடுமையான தலைவலி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வந்த மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அவர்களில் 12 பேருக்கு நிபா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதியானது. அவர்களில் செவிலியர் ஒருவரும் அடக்கம்.

இந்த நிலையில், வைரஸ் தொற்றுக்குள்ளான 12 பேருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், அவை பலனின்றி அடுத்தடுத்து 8 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே, கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜன், அசோகன் ஆகிய இருவரும் வைரஸ் பாதிப்பின் தீவிரம் காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர். இதை கேரள அரசு உறுதிபடுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நிபா வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றுவந்த அபின்(26) இன்று சிகிச்சை பலனன்றி உயிரிழந்தார். இதனால் நிபா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. 

நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். அவர்கள் அனைவரும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மாநில அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT