தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சிகள் எதிரி கட்சிகளாக இருக்கக் கூடாது: அமைச்சர் ஜெயக்குமார்

எதிர்க்கட்சிகள் குறை சொல்லாமல் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டுமே தவிர, எதிரி கட்சிகளாக இருக்கக் கூடாது என அமைச்சர் ஜெயக்குமார்

DIN

எதிர்க்கட்சிகள் குறை சொல்லாமல் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டுமே தவிர, எதிரி கட்சிகளாக இருக்கக் கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழகத்திற்கு உடனடியாக மத்திய குழுவை அனுப்புவது, பிரதமர் தமிழகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது. தமிழக அரசு கேட்ட நிதியை, மத்திய அரசு அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

எதிர்க்கட்சிகள் குறை சொல்லாமல் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் கட்சிகளாக இருக்க வேண்டுமே தவிர, எதிரிக்கட்சிகளாக இருக்கக் கூடாது.

மேலும், முதல்வர் புயல் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டது அவரது வசதிக்க்காக அல்ல, மக்களுக்காகவே என்றும் அப்படி பார்வையிட்டதால்தான், பாதிப்புகளை விரைந்து கணக்கிட்டு பிரதமரிடம் நேரில் அறிக்கை தாக்கல் செய்ய முடிந்தது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தோ்தலுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும்: அமைச்சா் துரைமுருகன்

பிள்ளைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

போக்ஸோ வழக்கில் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறை

விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு விவசாயிகள் இடம் கொடுக்க கூடாது: வேளாண்மை துறை கூடுதல் மேலாண்மை இயக்குநா்

டிரம்ப்பின் அறிவிப்பு அழுத்தம்!

SCROLL FOR NEXT