தற்போதைய செய்திகள்

ஆசிரியரான தந்தையே தனது 4 வயது மகளை சீரழித்த கொடூரம்!

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியரான தந்தையே தனது 4 வயது மகளை சீரழித்த கொடூரம் நடந்துள்ளது. 

ANI


ஆந்திரா: ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியரான தந்தையே தனது 4 வயது மகளை சீரழித்த கொடூரம் நடந்துள்ளது. 

ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் மணி குமார், இவர் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 4-வயதில் மகள் உள்ளார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணி குமாரும் அவரது மனைவியும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். 

மகள் தாயுடன் வசித்து வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை மணி குமார் தனது மகளை சந்திக்க மனைவி வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் மகளை தனது காரில் ஏற்றிக்கொண்டு பள்ளியில் விட்டுவிட்டு சென்றுள்ளார். 

ஆனால், பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி வயிறு வலிப்பதாக தனது தாயிடம் கூறியுள்ளார். அதன் பின் பள்ளிக்கு செல்லும் வழியில் மணி குமார் செய்த செயலை சிறுமி கூறியதும் தாய் அதிர்ச்சியடைந்தார்.

இதைத்தொடர்ந்து, சிறுமியின் தாய் மணி குமார் மீது கடந்த திங்கள்கிழமை(அக்.8) போலீஸில் புகார் அளித்தார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் ஆசிரியரான சிறுமியின் தந்தையை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

ஆசிரியரான தந்தையே தனது 4 வயது மகளை சீரழித்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புல்டோசர் நடவடிக்கை: 2 மாதங்களில் இடிக்கப்பட்ட 130-ல் பெரும்பாலும் இஸ்லாமியர் கட்டடங்களே!

வெற்றிக்கு 100 ரன்கள் தேவை என்றாலும் பேட்டிங்குக்கு வந்திருப்பேன்: கிறிஸ் வோக்ஸ்

வாக்குத் திருட்டு:சான்றுகளுடன் ராகுல் குற்றச்சாட்டு!செய்திகள் சில வரிகளில்| 7.8.25 | Rahulgandhi | MKStalin

ஜம்மு - காஷ்மீரில்.. அருந்ததி ராயின் ஆசாதி உள்பட 25 புத்தகங்களுக்குத் தடை! ஏன்?

பாஜகவின் பிரதிநிதியாக தேர்தல் ஆணையம்! - கார்கே விமர்சனம்

SCROLL FOR NEXT