தற்போதைய செய்திகள்

கபாலீஸ்வர் கோயில் சிலை விவகாரம்: அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் வீட்டில் சோதனை

DIN


சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோயில் சிலைகள் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோயிலில், கடந்த 2004-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முன்னதாக திருப்பணிகள் செய்யப்பட்டன. அப்போது, புன்னைவன நாதர் சந்நிதியில் உள்ள மயில் சிலை மாற்றப்பட்டு வேறு சிலை வைக்கப்பட்டதாகவும், ராகு, கேது சிலைகள் மாயமானதாக புகார் எழுந்தது. 

இதையடுத்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் 3 அதிகாரிகள் குழு இரண்டு நாளாக ஆய்வில் ஈடுபட்டு வந்தது. 

இந்நிலையில் 2004-ஆம் ஆண்டில் கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்தவரும் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக உள்ளவருமான திருமகளின் வியாசர்பாடி வீட்டிற்கு சென்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், அங்கு சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும், திருமகளிடம் சிலைகள் மாற்றப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT