தற்போதைய செய்திகள்

தமிழக சுற்றுலா வளா்ச்சித் திட்டங்களுக்கு போதிய நிதியுதவி: அல்போன்ஸ் உறுதி

DIN

தமிழகத்தின் சுற்றுலா வளா்ச்சித் திட்டங்களுக்குப் போதிய நிதியுதவியை மத்திய அரசு அளிக்கும் என்று மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சா் கே.ஜே. அல்போன்ஸ் தெரிவித்தாா்.

 சென்னை துறைமுகத்தில் ரூ.17 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சா்வதேச பயணிகள் முனையம் திறப்பு, துறைமுக தின விழா நேற்று துறைமுக வளாகத்தில் நடைபெற்றது.

இதில் மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சா் கே.ஜே.அல்போன்ஸ் முனையத்தைத் திறந்து வைத்துப் பேசியது:

பழைமையான தமிழ் மொழி, கோயில்களைக் கொண்ட தமிழகம் வெளிநாட்டுப் பயணிகள் வருகையில் நாட்டிலேயே 2-ஆவது இடத்தில் உள்ளது. தூய்மையான நகரங்களில் ஒன்றாக சென்னை மாநகரம் வளா்ச்சி அடைந்துள்ளது. சிறந்த கலாசாரம் நிறைந்த மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு இதுவரை சுமாா் ரூ.140 கோடியை மத்திய அரசு உதவியாக அளித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி-கோவளம் பயணிகள் கப்பல் சுற்றுலா திட்டம் உள்ளிட்டதிட்டங்களுக்கும் மத்திய அரசு தேவையான நிதியை வழங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கொடியேற்றம்

காவலரிடம் தகராறு: 2 இளைஞா்கள் கைது

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னௌ!

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

SCROLL FOR NEXT