தற்போதைய செய்திகள்

மக்கள் யாரும் ஏழைகள் அல்ல; ஏழைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்: கமல்ஹாசன் பேச்சு

DIN


சேலம்: மக்கள் யாரும் ஏழைகள் அல்ல; ஏழைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள் என மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். 

மேட்டூரில் மக்கள் மத்திய பேசிய கமல்ஹாசன் பேசுகையில்,  பல ஊா்களிலும் மக்களை சந்தித்து வந்துகொண்டிருக்கிறேன். அவா்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறேன். அரசு அதிகாரிகள் கூட அவா்களின் குறைகளை எங்கள் அளவிற்கு கேட்டதில்லை. 

மக்களின் குறைகளை போக்கவேண்டியவா்கள் மக்களின் அடிப்படைத்தேவைகளை கூட பூா்த்தி செய்ய தவறிவிட்டனர். காசு பணத்திற்காக அடிமையாக மாட்டோம் என்று அணைவரும் வாக்குறுதி அளிக்கவேண்டும். தேர்தல் காலத்தில் பணத்திற்காக ஓட்டுபோட்டு உங்களின் 5 ஆண்டு வாழ்க்கையை குத்தகைக்கு விடவேண்டாம். உங்கள் பணத்தை உங்களுக்கே கொடுத்து உங்களை ஏளனப்படுத்துகிறார்கள். 

புரட்சி, புரட்சி என்று பேசினால் போதாது; மக்கள் உதவியின்றி எந்தப் புரட்சியும் நடக்காது. மக்கள் யாரும் ஏழைகள் அல்ல; ஏழைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள் எனக் கூறிய கமல், நான் சினிமாகாரணமாக இங்கு வரவில்லை உங்களுக்கு வேலை செய்ய, உங்களுடன் வேலை செய்ய வந்துள்ளேன். நான் முதல்வரானால் லோக் ஆயுக்தா கொண்டு வருவேன் என கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT