தற்போதைய செய்திகள்

அறிவியல் எழுத்தாளர் ராமதுரை காலமானார்

DIN

சென்னை: அறிவியல் எழுத்தாளர் ராமதுரை (85) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று அதிகாலை காலமானார்.

தமிழில் அறிவியல் நூல்கள் பலவற்றை எழுதியவர் பத்திரிகையாளராகவும் பணியாற்றியவர் ராமதுரை 2009-ம் ஆண்டு சிறந்த அறிவியல் எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்றவர்.

தமிழில் வெளியான பல அறிவியல் நூல்களை எழுதியவர் எழுத்தாளர் என்.ராமதுரை. சிறுவர்களுக்கு புரியும் வகையில் அறிவியலை எளிமையாக தன் எழுத்துகளின் மூலம் கொண்டு சென்றவர் இவர். 

‘தினமணி’ நாளிதழின் செய்தி ஆசிரியராகவும், தினமணியின் வார இணைப்பாக வெளிவந்த ‘தினமணி சுடரின்’ பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். 

1989-ல் அமெரிக்க மற்றும் பிரிட்டன் அரசுகளின் அழைப்பில் அந்நாடுகளின் முக்கிய அறிவியல் நிறுவனங்களுக்குச் சென்றுவந்தவர். அந்த அனுபவத்தை ‘தினமணி கதிர்’ வார இதழில், ‘செல்வச் சீமையிலே’ என்ற தலைப்பில் தொடர் பயணக் கட்டுரையாக எழுதினார்.

அறிவியல் எது? ஏன்? எப்படி? , விண்வெளி, அணு, பருவநிலை மாற்றம், சூரிய மண்டல விந்தைகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் 10க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 

தினமணி, இந்து தமிழ் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் அறிவியல் தொடர்பான கட்டுரைகளை எழுதியுள்ளார். ‘அறிவியல்புரம்’ எனும் பெயரில் நடத்திவந்த வலைப்பூவில் அறிவியல் தொடர்பான பல கட்டுரைகளை எழுதியுள்ளார். 

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ராமதுரை சென்னையில் இன்று அதிகாலை காலமானார். அவரது இறுதிச்சடங்கு பெசன்ட் நகரில் இன்று நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 

60-களில் வெளிவந்த ‘நவமணி’ நாளிதழிலும் பணியாற்றிய என்.ராமதுரை, 1967-ல் ஐஸக் அஸிமோவ் எழுதிய ‘இன்சைட் தி ஆட்டெம்’ புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT