தற்போதைய செய்திகள்

அசாமில் அரசு பேருந்து சாலையோர குட்டைக்குள் விழுந்து விபத்து:  7 பேர் பலி; 21 பேர் காயம்

DIN


கவுகாத்தி: அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் இருந்து சென்ற அரசு பேருந்து நல்பாரி மாவட்டத்தில் இன்று குளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 21 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் இருந்து இன்று சுமார் 50 பயணிகளுடன் புறப்பட்ட அரசு பேருந்து பார்பேட்டா நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது.
 
மாலை 3.30 மணியளவில் நல்பாரி மாவட்டத்தின் வழியாக சென்றபோது அடபாரி என்னுமிடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்து குட்டைக்குள் வீழ்ந்துள்ளது. 

பேருந்து குட்டைக்குள் விழுந்தபோது பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு உள்ளூர் மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பின்னர் தகவல் அறிந்து போலீஸாரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 
 
இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 21 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பேருந்தில் 50 பயணிகள் இருந்துவந்ததாகவும், சிலரை காணவில்லை என கூறப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

SCROLL FOR NEXT