தற்போதைய செய்திகள்

ஓபிஎஸ், ஈபிஎஸ் குறித்து அவதூறு பேச்சு: லியோனி மீது வழக்குப்பதிவு

DIN


சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து மேடையில் அவதூறாக பேசியதாக திமுக பேச்சாளரும், பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் லியோனி மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் ஐ.லியோனி தனியாக பட்டிமன்றமும் நடத்தி மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வந்தார். பின்னர், திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு முழுநேர திமுக பேச்சாளர் ஆனார். திமுக மேடைகளில் நகைச்சுவையாக ஆளுங்கட்சியை, அமைச்சர்களை விமர்சித்து வந்தார். 

கடந்த ஜூலை மாதம் தி.நகர், சதாசிவம் சாலையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு திண்டுக்கல் லியோனி பேசுகையில்,  தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அரசியலை விமர்சித்து பேசினார்.

இதையடுத்து தமிழக அரசையும், தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களை அவதூறாக விமர்சித்து பேசியதாக பாண்டிபசார் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மணிமேகலை புகார் அளித்தார்.

அவரது புகாரின்பேரில் திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், மிரட்டல், கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் பாண்டிபசார் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தகிக்கும் வெயில்... தற்காக்கத் தேவை விழிப்புணா்வு...

மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டியில் மழை வேண்டி ராம நாம ஜெபம்

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம்

சேரன்மகாதேவி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT