மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் இல்லாதவர் ஸ்டாலின்: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேச்சு
அதிமுக ஆட்சியை கலைத்துவிட்டு முதல்வராக நினைக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் முதல்வராகும் எண்ணம் மட்டுமே உள்ளதே தவிர,
பொள்ளாச்சி: அதிமுக ஆட்சியை கலைத்துவிட்டு முதல்வராக நினைக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் முதல்வராகும் எண்ணம் மட்டுமே உள்ளதே தவிர, மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் இல்லை என அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
ஆனைமலை வட்டார அதிமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா வழியில் தற்போது கட்சியும், ஆட்சியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிமுக ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது.
ஸ்டாலின் திமுகவின் தலைவர் ஆனவுடனேயே தான் முதல்வா் ஆகிவிட்டதாக கருதுகிறார். அதிமுக ஆட்சியை கலைத்துவிட்டு முதல்வராக நினைக்கிறார். முதல்வர் ஆகும் எண்ணம் மட்டுமே உள்ளதே தவிர மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் இல்லை. ஊழலுக்கு பெயா்போனவா்கள் திமுகவினா். ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்து செயல்படுத்திய திட்டங்களைவிட தற்போது 10 மடங்கள் திட்டங்கள் அதிகமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
Advertisement
வரும் மக்களவைத் தோ்தலில் பொள்ளாச்சி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெரும். அதற்கு ஆனைமலை பகுதி எப்போதுமே உறுதுணையாக இருக்கும். ஆனைமலை அதிமுகவின் கோட்டை என்றார்.