தற்போதைய செய்திகள்

ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு

ஈக்வடார் நாட்டில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவிசார்

DIN


குவைட்டோ: ஈக்வடார் நாட்டில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.

தெற்கு அம்பாடோ நகரத்திலிருந்து சுமார் 94 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பகுதியை மையமாக கொண்டு 112 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவிசார்மையம் கூறியுள்ளது. 

தலைநகர் குவைட்டோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் இருக்கும் கட்டடங்கள், வீடுகள் பலமாக குலுங்கின. இதையடுத்து வீடுகளில் இருந்து மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறி, வெட்ட வெளியில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் பல கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புவேர்டாஸ் நேக்ராஸ், கானோ மற்றும் சுஞ்சி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இல்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2016 -ஆம் ஆண்டு ஈக்வடார் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் 7.8 என்ற ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தினால் 650-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

11 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லையா? காங்கிரஸ்

நியூயார்க்கில் நாயகி ஊர்வலம்... ஏஞ்செலின்!

SCROLL FOR NEXT