புதுதில்லி: தலைநகர் தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், ஹரியானாவில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், ஹரியானாவிலும் இன்று மாலை 4.37 மணியிளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 புள்ளிகளாக பதிவாகியிருந்ததாகவும், பூமிக்கடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களை நோக்கி ஒடி வந்தனர். இதனால், தலைநகரில் பரபரப்பு நிலவியது.
நிலநடுக்கத்தை உணர்ந்தவர்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.