தற்போதைய செய்திகள்

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையை காங்கிரஸ் ஆதரிக்காது - ரன்தீப் சிங் சுர்ஜிவாலா

DIN


புதுதில்லி: முன்ளாள் பிரதமா் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வதை காங்கிரஸ் ஆதரிக்கவில்லை என  காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 -ஆம் ஆண்டு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற ஒரு தேர்தல் பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன் உள்பட 7 பேரும் 1991-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு இன்று வரை 27 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்யவேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. அதற்கேற்ப இப்போது உச்சநீதிமன்றம் பேரறிவாளனை உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்ற தீர்ப்பை அளித்தது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்.9) 7 பேரையும் விடுதலை செய்யலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதைப் பரிந்துரையாக ஆளுநருக்கும் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலையை காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது. பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் மீது எந்தவித சமரசமும் இல்லை என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தன் நண்பனான அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தீவிரவாதிகளை ஆதரிப்பது தான் மோடி அரசின் கொள்கையா என்று கேள்வி எழுப்பினார்.

பாஜகவின் கூட்டணியான அதிமுக அரசும், பாஜகவால் நியமிக்கப்பட்ட ஆளுநரும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்ய முயற்சி எடுத்து வருகின்றனர். இது தான் அரசின் கொள்கையா? முன்னாள் பிரதமரையும், அப்பாவி மக்களையும், காவலர்களையும் கொன்ற தீவிரவாதிகளை விடுதலை செய்ய போகிறதா இந்த அரசு? என கேள்வி எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT