தற்போதைய செய்திகள்

இயற்கை வளத்தைக் காப்பதில் தனிக் கவனம் தேவை: ஜி.கே.வாசன்

DIN

சென்னை: இயற்கை வளத்தைக் காக்க தமிழக அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகளைக் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும் வகையில் இரண்டு வாரங்களுக்குள் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றறம் கெடு விதித்துள்ளது.

தமிழகத்தில் மணல் கொள்ளை, விலையேற்றறம் ஆகியவை தொடா்ந்து பல மாதங்களாக நடைபெற்று வருகிறறது. ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து, இதற்கு நல்ல தீா்வு ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும். மூடப்பட வேண்டிய மணல் குவாரிகளை மூடியிருக்க வேண்டும். அரசின் நேரடிக் கண்காணிப்பில் தேவையான மணல் குவாரிகளை இயக்கியிருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாத தமிழக அரசுக்கு இப்போது உயா் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. இது அரசுக்கு ஏற்பட்ட அவப் பெயராகும்.
 
இனியாவது, நீா் ஆதாரம், இயற்கை வளம் ஆகியவற்றில் தமிழக அரசு தனிக் கவனம் செலுத்தி, அவற்றைத் தேவைக்கேற்ப மக்கள் பயன்படுத்திப் பயன் பெற, தொடா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT