தற்போதைய செய்திகள்

ஆண்டிப்பட்டி துப்பக்கிச் சூடு: தேனி மாவட்ட ஆட்சியர் பேட்டி

DIN


ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் துப்பாக்கி சூடு குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்தார் அதன் விவரம்:

இன்று இரவு 8.15 மணி அளவில் கிடைத்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து அமமுக அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது காவலர்களை அங்கிருந்த சிலர் தாக்க முயன்றதால் தற்காப்புக்காக காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

மேலும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் அங்கு பைகளில் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அமமுக அலுவலகத்தில் இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சிலர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர் அவர்களை கைது செய்ய காவலர்கள் விரைந்துள்ளனர். இங்கிருந்து எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு  இந்த சோதனைகுறித்து முழு விவரம் நாளை காலை தெரியவரும் என ஆட்சியர் தெரிவித்தார்.
முன்னதாக அதிக அளவில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 மேலும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் இன்று இரவு  சுமார் 2 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT