தற்போதைய செய்திகள்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

DIN


சென்னை: சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை (ஆக 9) பெட்ரோல், டீசல் முறையே லிட்டருக்கு 16 மற்றும் 12 காசுகள் குறைந்துள்ளது. 

சுமார் 15 ஆண்டுகளாக  எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதம் இருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைக்கும் நடைமுறை  கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைவிடப்பட்ட நிலையில், நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

 இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.87 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 12 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.69.47 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT