தற்போதைய செய்திகள்

குஜராத் வெள்ளத்தில் சிக்கிய சிறுமிகள் மீட்பு: தோளில் சுமந்து சென்ற காவலருக்கு குவியும் பாராட்டு!

குஜராத் கனமழை வெள்ளித்தில் சிக்கிய சிறுமிகளைத் பத்திரமாக மீட்டு தோளில் சுமந்து சென்ற காவலர் பிரித்விராஜ் ஜடேஜாவுக்கு பாராட்டுகள் 

DIN


குஜராத் கனமழை வெள்ளித்தில் சிக்கிய சிறுமிகளைத் பத்திரமாக மீட்டு தோளில் சுமந்து சென்ற காவலர் பிரித்விராஜ் ஜடேஜாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. 

இதில், குஜராத்தில் பெய்து வரும் கனமழையால், பல கிராமங்கள் நீரில் முழ்கியுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசித்துவந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த காவல்துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளம் பாதித்த மோர்பி கிராமத்தில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. அப்படி மீட்புப் பணி நடைபெறும் போது காவலர் பிரித்விராஜ் செய்த செயல் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரிதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

அதாவது, மோர்பி கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு குழந்தைகளும் வெளிவர முடியாமல் தவித்து வந்துள்ளனர். அப்போது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்து பிரித்விராஜ் ஜடேஜா, இரண்டு குழந்தைகளையும் இரு தோள்களிலும் குழந்தைகளை அமரவைத்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இடுப்பளவு தண்ணீரில் நடந்தே சென்று காப்பாற்றி உள்ளார். பிரித்விராஜ் ஜடேஜாவின் சேவை வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது. இதையடுத்து காவலர் பிரித்விராஜ் ஜடேஜாவின் இந்த துணிச்சலான செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

அம்மாநில முதல்வர் விஜய் ரூபானியின் பாராட்டு செய்தியில், கடுமையான சூழல்களிலும் அரசு அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு காவலர் பிரித்வி ராஜ்சிங் ஜடேஜா ஒரு எடுத்துக்காட்டு. அவரது உறுதியைப் பாராட்டுங்கள்" என தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லட்சுமன் பாராட்டில், பிரித்வி ராஜ்சிங்கின் முன்மாதிரியான அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்திற்கு தலைவணங்குகிறோம் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT