தற்போதைய செய்திகள்

அத்திவரதரை தரிசிக்க கூட்டம் நாளுக்குநாள் அதிகரிக்கிறது: மாவட்ட ஆட்சியர் பேட்டி

DIN


காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் விழா கடந்த ஜூலை 1 ஆம் தேதி தொடங்கியது. அத்திவரதர் 31ஆம் தேதி வரை சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வருகிறார். அத்திவரதர் தரிசனம் வரும் 16 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 17ஆம் தேதி ஆகம விதிப்படி பூஜைகள் செய்து, அத்திவரதர் சிலை கோயிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படவுள்ளது. 

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களுக்கு இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வரும் 16 ஆம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் முடிவடையும் நிலையில், பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகிரித்து வருகிறது. பக்தர்கள் வெயிலில் நிற்பதை தவிர்க்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதை அடுத்து 3000 பக்தர்கள் தங்கும் வகையில் புதிய பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு காலையில் இருந்தே அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக கூடுதலாக 25 சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வந்தவாசி திருவண்ணாமலையில் இருந்து வரும் பக்தர்கள் டி.ஏ.வி பள்ளி அருகே தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 17 ஆம் தேதி ஆகம விதிப்படி பூஜைகள் செய்து, அத்திவரதர் சிலை கோயிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படும் என்று ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். 

மாவட்ட நிர்வாகம் பாதுகாப்புப் பணிக்காக கூடுதல் போலீஸாரை பணியில் ஈடுபடுத்தி வருகிறது என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT