தற்போதைய செய்திகள்

நாடு முழுவதும் உற்சாகத்துடன் பக்ரீத் கொண்டாட்டம்!

இஸ்லாமியர்களின் இறைதூதர் இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு

DIN


நாடு முழுவதும் இன்று உற்சாகத்துடன் பக்ரீத் கொண்டாடப்பட்டு வருகிறது.  

இஸ்லாமியர்களின் இறைதூதர் இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளில், சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டது. 

தில்லி ஜமா மசூதி, போபால் ஈத்கா மசூதி, மும்பை ஹமிதியா மசூதி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பல லட்சம் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். மும்பையில் உள்ள ஹமிதியா மசூதியில், ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகைகள் நடத்தினர். 

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, தில்லியின் காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள பஞ்ச ஷரீஃப் தர்காவில், தியாகத் திருநாளையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்துகொண்டார்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள இத்கா மசூதியில் திரண்ட பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், சிறப்பு தொழுகைகள் செய்தனர். தொழுகையில் இஸ்லாமியர்கள், குழந்தைகள் பங்கேற்றனர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். 

பக்ரீத் கொண்டாட்ட தினத்தில் புத்தாடைகள் அணிந்து, ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

SCROLL FOR NEXT