தற்போதைய செய்திகள்

முத்தலாக் விவகாரம்: கோழிக்கோட்டில் முதல் கைதை பதிவு செய்தது கேரளா

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே மூன்று முறை முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்ததாக ஒருவரை கேரள போலீஸார் இன்று

DIN


கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே மூன்று முறை முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்ததாக ஒருவரை கேரள போலீஸார் இன்று வெள்ளிக்கிழமை (ஆக 16) கைது செய்துள்ளனர். முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் தென் மாநிலத்தில் நடந்த முதல் கைது இதுவாகும். 

இதுதொடர்பாக கோழிக்கோடு அருகே முக்கோம் காவல் நிலை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 

இ.கே. ஹூசாம்(34) என்பவர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தனது மனைவியிடம் மூன்று முறை 'தலாக்' என்று கூறி விவகாரத்து செய்துள்ளார். 

பின்னர் ஹூசாமின் மனைவி நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் அந்த பெண்ணின் கணவர் ஹூசாம் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்திருந்தது. 

தாமராசேரி நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவின் பேரில் இன்று வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 16) ஹூசாம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக போலீஸ் அதிகாரி கூறினார். முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 2019-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஹூசாம் கைது செய்யப்பட்டது தென் மாநிலத்தில் நடந்த முதல் கைது இதுவாகும். 

முத்தலாக் தடை சட்டத்தை மீறி மனைவிக்கு முத்தலாக் கூறி விவகாரத்து செய்த கணவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

முஸ்லிம் சமூகத்தில் தொடர்ந்து மூன்று முறை தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறைக்குத் தடை மற்றும் கணவருக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஜூலை 25 ஆம் தேதியும், மாநிலங்களவையில் ஜூலை 30 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. எனினும், முத்தலாக் கூறி பெண்ணை விவாகரத்து செய்வது தொடர்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT