தற்போதைய செய்திகள்

அருண் ஜேட்லி தொடர்ந்து கவலைக்கிடம்: பிரதமர் மோடி, அமித் ஷா மருத்துவமனை விரைவு

DIN


உடல்நலக் குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜேட்லிக்கு உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 

சுவாசப்பிரச்னை உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜேட்லி கடந்த 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு, தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது. இருந்தபோதிலும், அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகளே இன்னமும் பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் நேற்று சனிக்கிழமை தெரிவித்தனர். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே, உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி, பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், காங்கிரஸ் தலைவர்கள் அபிஷேக் சிங்வி, ஜோதிராதித்ய சிந்தியா, விமானப்படைத் தலைமைத் தளபதி பி.எஸ். தனோவா உள்ளிட்டோரும் மருத்துவமனைக்குச் சென்று ஜேட்லியின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்தனர்.

அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று அருண் ஜேட்லியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். 

இந்நிலையில், ஜேட்லிக்கு உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு நிலையிலும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில் டயாலசிஸ் சிகிச்சை தொடங்க உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டார தகவல் வெளியானதை அடுத்து, தற்போது பூடான் பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அருண் ஜேட்லியை காண எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT