தற்போதைய செய்திகள்

ஜெயலலிதாவிற்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தோம்: பிரதாப் ரெட்டி பேட்டி

DIN


சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தோம் என அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார். 

அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, சுமார் 75 நாள்கள் சிகிச்சைக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5 ஆம் தேதி மாரடைப்பால் காலமனார் என்று அப்போலோ மருத்துவமனை அறிவித்தது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக அன்றைய துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பட்டது. இந்த ஆணையம் அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயலலிதா மரண விவகாரத்தில் எதையோ மறைக்கப் பார்ப்பதாக உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நல்ல சிகிச்சை அளித்து அப்பலோ மருத்துவமனை காப்பாற்றியது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரசித்தி பெற்ற உள்நாட்டு மருத்துவர்கள் மற்றும் வெளிநாட்டு மருத்துவர்கள் மூலமாக உலக தரத்திலான சிகிச்சை அளித்தோம். உலக தரம் வாய்ந்த சிறந்த மருத்துவர்கள் அப்பலோ மருத்துவமனையில் இருக்கிறார்கள்.

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தங்களை விசாரணைக்கு அழைத்தபோது ஆணையத்தில் மருத்துவர் குழு இல்லாததை ஏற்க முடியவில்லை என்று கூறினோம். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக மீண்டும் விசாரணை தொடங்கினால், ஆணைய விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT