தற்போதைய செய்திகள்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: தங்கம் வென்ற பி.வி. சிந்துக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் முதன் முறையாக தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

DIN


சென்னை: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் முதன் முறையாக தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்று வந்த 25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பானின் நோசோமி ஒகுஹராவை 21-7; 21-7 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார். உலக மகளிர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை ஆகும்.

மு.க. ஸ்டாலின் டிவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பி.வி.சிந்துவின் வெற்றி வருங்கால இளம் தலைமுறையினருக்கு உத்வேகமாக அளிக்கும். அவர் வரும்காலங்களில் பல வெற்றிகளை பெற தான் வாழ்த்துகிறேன்  என வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT