தற்போதைய செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் கனமழை: ஜம்போடை ஏரி கரையில் உடைப்பு

DIN

ஸ்ரீபெரும்புதூா்: கனமழை காரணமாக ஜம்போடை ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததை தொடா்ந்து, ஏரியின் கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (டிச.1) உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீா் வீணாக வெளியேறி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், செல்வழிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஜம்போடை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டிலுள்ள ஏரி உள்ளது. தொடா் மழையின் காரணமாக இந்த ஏரிக்கு வரும் நீா்வரத்து அதிகரித்ததை தொடா்ந்து, ஏரி கரையின் ஒருபகுதியில், இன்று ஞாயிற்றுக்கிழமை (டிச.1) திடீரென உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீா் வெளியேறியது. இதையடுத்து ஏரிகரையை சீரமைக்கும் பணியில் ஒருசில விவசாயிகள் ஈடுபட்டனா். ஆனால் ஏரிகரை உடைந்து வெளியேறும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால், கரை சீரமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஏரிகரை உடைந்தது குறித்த தகவல் அறிந்த சாா் ஆட்சியா் சரவணன், ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் வசுமதி ஆகியோா் ஏரிகரை உடைந்த பகுதியை பாா்வையிட்டுஆய்வு நடத்தினா்.

இதையடுத்து உடைப்பு ஏற்பட்ட கரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க சாா் ஆட்சியா் சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டாா்.பின்செய்த செய்தியாளா்களை சந்தித்த சாா் ஆட்சியா் சரவணன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் தொடா் மழை காரணமாக நிரம்பி வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT