தற்போதைய செய்திகள்

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு ஆய்வுக்குக் கூட அனுமதி இல்லை: அமைச்சர் மணிகண்டன் 

DIN


ராமநாதபுரம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் ஆய்வுக்குக் கூட அனுமதி வழங்கப்படாது என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம். மணிகண்டன் தெரிவித்தார். 

ராமநாதபுரம் மாவட்ட அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு வழங்கப்பட்ட 15 புதிய பேருந்துகளை ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் எம்.மணிகண்டன் இன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர் அவா் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராமநாதபுரத்தில் கடந்த 3, 4 ஆம் தேதிகளில் ஏற்பட்ட திடீா் மின்வெட்டு குறித்து, மின்துறை அமைச்சா் தங்கமணியிடம் சீரமைக்க கோரிக்கை விடுத்தேன். இதையடுத்து மின் பாதை சீரமைப்புப் பணி முடிந்து மின்சாரம் உடனடியாக விநியோகிக்கப்பட்டது.

ராமநாதபுரம் நகரில் போதிய மின்சாரம் விநியோகம் செய்ய பட்டணம்காத்தான் பகுதியில் ரூ.11 கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும்.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆய்வு செய்யக்கூட அனுமதி வழங்கப்படமாட்டாது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT