தற்போதைய செய்திகள்

ஒழுங்கு முறை வழிகாட்டுதல்களை மீறிய ஸ்டேட் வங்கிக்கு ரூ.7 கோடி அபராதம்:  ரிசர்வ் வங்கி அதிரடி 

DIN


மும்பை: ஒழுங்கு முறை வழிகாட்டுதல்களை மீறியதற்காக பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.7 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரத ஸ்டேட் வங்கியின் 2017 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிதிநிலைமை குறித்து தெரிவித்த தகவலின் அடிப்படையில் அங்கு ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது வருமான அங்கீகாரம் மற்றும் சொத்து வகைப்பாடு விதிகள், நடப்பு கணக்குகள் தொடங்குவதற்கு மற்றும் இயக்குவதற்கும்  நடத்தை விதிமுறைகள், பெரிய கடன்களுக்கான வரவுகளைப் பற்றிய மத்திய தகவல் அமைப்புக்கு விவரங்கள் அளிப்பது, மோசடிகளை புகார் அளித்தல் தொடர்பானவைகளில் ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை ஸ்டேட் வங்கி பின்பற்றப்படாமல் மீறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 

இதையடுத்து ஸ்டேட் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, வாய்மொழி விளக்கம் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கியின் ஒழுங்கு முறை வழிகாட்டுதல்கள் உத்தரவுகளை மீறியதற்காக பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.7 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. 

இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT