தற்போதைய செய்திகள்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு

DIN


ஜகார்தா: இந்தோனேசியாவின் பாலி பிராந்திய பகுதியில் இன்று செவ்வாய்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானது.

இந்தோனேசியாவின் பாலி  பிராந்திய பகுதியில் 00.18 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 5.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேறினர். எனினும், இந்த நிலநடுக்கத்தில் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவின்  மாலுக்கு தீவுப்பகுதியில் ரிக்டர் அளவில் 7.3 அலகில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இந்தோனேஷியாவில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில், இந்தியா உள்ளிட்ட பிராந்திய நாடுகளில் 2.2 லட்சம் பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

USGS Big Quakes: An earthquake with a magnitude of 5.7 on the Richter Scale hit Bali region, Indonesia at 00:18 UTC today

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT