தற்போதைய செய்திகள்

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு...!

10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

DIN


சென்னை: 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-2020 ஆம் கல்வி ஆண்டில், நடைபெறவுள்ள அரசுப் பொதுத் தேர்வுகளான பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு ஆகியவற்றுக்கான கால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மார்ச் 2 ஆம் தேதி தொடங்கும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 24 ஆம் தேதியன்று முடிவடைகிறது.

பதினொன்றாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 26 ஆம் தேதி நிறைவடைகிறது. மார்ச் 17 ஆம் தேதி துவங்கும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 9 ஆம் தேதி நிறைவடைகிறது.

தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதியை பொறுத்தவரை, ஏப்ரல் 24 ஆம் தேதியன்று 12 ஆம் வகுப்புக்கும், 11ஆம் வகுப்புக்கு மே 14 ஆம் தேதியும், மே 4 ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை:
17.03.2020 - மொழித்தேர்வு - முதல் தாள்
19.03.2020 - மொழித்தேர்வு - இரண்டாம் தாள்
21.03.2020 - விருப்பமொழிப் பாடம்
27.03.2020 - ஆங்கிலம் - முதல் தாள்
30.03.2020 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
02.04.2020 - கணிதம்
07.04.2020 - அறிவியல்
09.04.2020 - சமூக அறிவியல்

பிளஸ் 1 பொதுத்தேர்வு கால அட்டவணை: 
04.03.2020  - மொழிப்பாடம்
06.03.2020 - ஆங்கிலம்
11.03.2020 - கணக்கு, வணிகவியல், விலங்கியல்
13.03.2020 - கணினி அறிவியல்
18.03.2020 - இயற்பியல், பொருளாதாரம்
23.03.2020 - உயிரியல், வரலாறு, தாவரவியல்
26.03.2020  - வேதியல், கணக்குப்பதிவியல், புவியியல்

பிளஸ் 2 பொதுத்தேர்வு கால அட்டவணை: 
02.03.2020 - மொழிப்பாடம்
05.03.2020 - ஆங்கிலம்
09.03.2020 - கணக்கு, வணிகவியல், விலங்கியல்
12.03.2020 - கணினி அறிவியல்
16.03.2020 - இயற்பியல், பொருளாதாரம்
20.03.2020 - உயிரியல். வரலாறு, தாவரவியல்
24.03.2020 - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆன்லைன் கிரிக்கெட் டிக்கெட் விற்பனை மோசடி! இளைஞர்களே இலக்கு!!

ஒடிசாவில் பாஜக நிர்வாகி சுட்டுக்கொலை!

லோகா சாப்டர் 1! ஓடிடியில் எங்கே? எப்போது?

போலி தொழில்நுட்ப சேவை மோசடி: 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ஏர் இந்தியா விபத்தை சித்திரித்து துர்கா பூஜைக்கு வைக்கப்பட்ட அலங்கார பந்தலால் சர்ச்சை!

SCROLL FOR NEXT